என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெறும் - அமைச்சர் நேருவின் பேச்சு வைரல்
அமைச்சர் நேரு
இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பதற்கு பதிலாக என்.டி.ஏ கூட்டணி (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) வெற்றி பெறும் என தவறுதலாக பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகின்ற 30ஆம் தேதி சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார் . அவர் பிரச்சாரம் செய்ய உள்ள இடத்தை தேர்வு செய்வதற்காக திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்ற இடத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியா கூட்டணி என்பதற்கு பதிலாக என். டி. ஏ.கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தவறுதலாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Next Story