சிவகாசி அருகே மனைவி பிரிந்த ஏக்கம் - கணவன் தூக்குப் போட்டு தற்கொலை

சிவகாசி அருகே மனைவி பிரிந்த ஏக்கம் - கணவன் தூக்குப் போட்டு தற்கொலை

காவல்துறை விசாரணை


சிவகாசி அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் ராஜபாண்டியன் மகன் மாரிச்செல்வம் (36). இவருக்கும் ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த கடந்த10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ஐஸ்வர்யா தனது மகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாரிச்செல்வம் தனது தாய் மாரியம்மாளுடன் வசித்து வந்தார்.சம்பவத்தன்று தாய் மாரியம்மாள் வீ்ட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்தவரின் உடலை கைப்பற்றி, சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story