திருமருகல் அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

திருமருகல் அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

பலியான மூதாட்டி

திருமருகல் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியாகினார்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி விச்சூர் காலணித் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மணியம்மாள் (வயது 60). இவர் தனது குடிசை வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்துள்ளார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் கடும் மழையின் போது வீட்டின் ஒருப்பக்க சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த மணியம்மாள் மேல் விழுந்தது.மணியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மணியம்மாளை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மணியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் இருந்த திருக்கண்ணபுரம் போலீசார் மணியம்மாள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story