திருமருகல் அருகே பாதியில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டி முடிக்கப்படுமா?

திருமருகல் அருகே பாதியில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டி முடிக்கப்படுமா?

பாதியில் நிறுத்தப்பட்ட கட்டிட பணிகள்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட ஊராட்சி செயலக கட்டிடம் கட்டி முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

, நாகை மாவட்டம் திருமருகல் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட ஊராட்சி செயலக கட்டிடம் கட்டி முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு திருமருகல் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட ஊராட்சி செயலக கட்டிடம் கட்டி முடிக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஊராட்சி செயலக கட்டிடம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்,14-வது நிதி குழு மானியம்,15-வது நிதி குழு மானியம் நிதியின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுமான பணிகள் கடந்த 2021-22 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆறு மாத காலங்களாக பணிகள் எதுவும் நடைபெறாமல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற அலுவலகம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் சேவை மைய கட்டிடத்தில் நடைபெற வேண்டிய பணிகள் பாதிப்புக்கு உள்ளாகிறது.மேலும் கட்டிடம் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு வைத்திருப்பதால் கட்டிடத்தை சமூக விரோதிகள் பலர் பகல் மற்றும் இரவு நேரங்களில் பாராக பயன்படுத்தி வருகின்றனர். நடவடிக்கை இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஊராட்சி செயலக கட்டிடத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து கட்டிடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துக் காத்துள்ளனர்.

Tags

Next Story