விளையாட்டு மைதாைனம் வேணும்...!

விளையாட்டு மைதாைனம் வேணும்...!

கிள்ளியூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தி அமைச்சர் உதயநிதியிடம், அத்தொகுதி எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் மனு அளித்தார். 

கிள்ளியூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தி அமைச்சர் உதயநிதியிடம், அத்தொகுதி எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் மனு அளித்தார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- கிள்ளியூர் தாலுகா பொதுமக்கள் நலன் கருதி தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கிள்ளியூர் பகுதியில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்கும் முறையாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் இல்லை. ஆகவே கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நலன் கருதி 2022 - 2023 ம் ஆண்டு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது அரசு சார்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட மினி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story