அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் சிறப்பு
தெங்காசி மாவட்டம், புளியங்குடியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதனை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் இதனை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு அதிமுக மாவட்ட செயலாளருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா மற்றும் முன்னாள் அமைச்சர் வி. எம். ராஜலட்சுமி உள்ளிட்டோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்ப்பூசணி, பழங்கள், நீர் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டன.
Next Story