நீட் ரத்து, 10 லட்சம் டிஜிட்டல் கையெழுத்து இயக்கம் - துவக்கிவைத்த அமைச்சர் எ.வ.வேலு

நீட் ரத்து, 10 லட்சம் டிஜிட்டல் கையெழுத்து இயக்கம்  - துவக்கிவைத்த அமைச்சர் எ.வ.வேலு

கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த அமைச்சர் 

நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி 10 லட்சம் மாணவர்களிடம் டிஜிட்டல் கையெழுத்து பெறும் இயக்கத்தை பொதுப்பணித்துறைஅமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக இளைஞர் அணி, மருத்துவ அணி, மாணவர் அணி மற்றும் பொறியாளர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. திமுக பொறியாளர் அணி சார்பில், திருவண்ணாமலை, அருணை பொறியியல் கல் லூரியில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி 10 லட்சம் மாணவர்களிடம் டிஜிட்டல் கையெழுத்து பெறும் நிழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில பொறியாளர் அணிச் செயலாளர் கு.கருணாநிதி வகித்தார். தலைமை கட்டப் பொறியாளர் மற்றும் நிர்வாகிகள் மோகன்ராஜ், ச.பிரகாஷ் .பி.வினோத்குமார், த.ரகுபதி, தா.சண்முகம், து.மணியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர் சி.ராம் காந்த் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் டிஜிட்டல் கையெழுத்திட்டு, பொதுப் பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு கையெழுத்து இயகத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:- சமூக நீதிக்கு எதிரான எந்த செயல்களையும் தி.மு.க. எப்போதும் எதிர்க்கும். நீதிக்கட்சி காலம் தொடங்கி இன்றைக்கு வரை தமிழ்நாடு சமூக நீதியை பாதுகாக்கும் மாநிலமாக இருக்கிறது. அதனால்தான், பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு வேறுபட்டு நிற்கிறது. உலகில் முதன்முதலாக நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் நீதிகட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அதேபோல், இடஒதுக்கீடு வழங்குவதிலும் தமிழ் நாடு தான் முன்னோடி வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, ஒன்றிய அரசு பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை கலைஞர் பெற்றுத்தந்தார். பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நீட் கொண்டுவரப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டுக்கு நீட் ஒத்துவராது என கலைஞர் எதிர்த்தார். அதனால், நீட் தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, பா.ஜ.க. அரசு வந்தபோதும் நீட் கொண்டுவரப்பட்டது. நீதிமன்றத்தின் மூலம் தமிழ் நாட்டுக்கு தடை ஆணை பெற்றார் கலைஞர் பின்னர், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலும் கலைஞரை பின்பற்றி தமிழ் நாட்டில் நீட் வர அனுமதிக்கவில்லை. அவரது மறைவுக்கு பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் நீட் நுழைந்தது. அவர் தடுத்திருந்தால் வந்திருக்காது. சமஸ்கிருதம் படித்திருந்தால் தான் மருத்துவம் சேர முடியும் என்ற நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றினோம். இப்போது, நம் உரிமையை பறிப்பதற்காக நீட் கொண்டுவந்துள்ளனர். பிளஸ்2 வரை படித்து பெறும் மதிப்பெண்களை விட 3 மாத தனியார் பயிற்சி மையங்களில் படித்து பெறுகிற நீட் மதிப்பெண்தான் தகுதியானது என்பதை எப்படி ஏற்க முடியும்? பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் எதிர்ப்புக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார். சட்டமன்றத்தில் நீட் டுக்கு எதிராக ஏகமனதாக இயற்றிய தீர்மானத்தை கிடப்பில் போட்ட ஆளுநர், தனக்கு அதிகாரம் இருந்தால் அந்தத் தீர்மானத்தை ரத்து செய்துவிடுவேன் என பகிரங்கமாக பேசினார். குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்துக்குள் நீட் நுழைய விடமாட்டேன் எனப் பேசிய மோடி, பிரதமரானதும் எல்லா மாநிலமும் நீட் நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறார். நீட் தேர்வினால் சமூகம் பாழ்பட்டு கிடக்கிறது. மாவட்டத்தில் முதலிடம் பெற்ற அனிதா வால் கூட மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. இன்னும் எத்தனை உயிர்களை இழப்பது. நீட்டுக்கு எதிரான தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. எனவே அந்த ஒப்புதலை பெறுவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த முயற்சியின் காரணமாகக் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.


நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணா துரை, தலைமைச் செயற் குழு உறுப்பினர் இரா.ஸ்ரீத ரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ. சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் ப்ரியா விஜயரங்கன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு. கு.கணேஷ், பச்சையம்மன் முத்து, பால முரளி கிருஷ்ணா, பிரவீன் ஸ்ரீதரன், துரைவெங்கட் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட துணை அமைப்பாளர் மு.தினேஷ்பாபு நன்றியுரை கூறினார்.

Tags

Next Story