நீட் கிராஷ் பயிற்சி வகுப்பு துவக்கம்

நீட் கிராஷ் பயிற்சி வகுப்பு துவக்கம்
நீட் பயிற்சி வகுப்பு
கள்ளகுறிச்சியில் நீட் கிராஷ் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி மையங்கள் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி, விழுப்புரம் வி.ஆர்.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருக்கோவிலுார் கனரா வங்கி அருகில் உள்ள ஜே.எஸ்.கே., காம்பளக்ஸ், கடலுார் செயிண்ட் ஜோசப் ஐ.டி.ஐ., வளாகம், விருத்தாசலம் ஜெய் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி வகுப்பு மூலம் இதுவரை 627 பேர் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ளனர்.

மேலும், கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் ஹேமநாத் ஹதராபாத் ஐ.ஐ.டி.,-யிலும், மாணவன் பாலாஜி கொல்கத்தா என்.ஐ.டி.,யிலும் சேர்க்கை பெற்றுள்ளனர். ஏ.கே.டி., பள்ளி 'நீட் கிராஷ் பயிற்சி வகுப்பில் நாள்தோறும் தேர்வுகள், பகுதி தேர்வுகள், நீட் மாதிரி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அம்சங்களுடன் நேரடி நிர்வாகம் மூலம் 20க்கும் மேற்பட்ட தென்னிந்திய ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது.

மேலும், நீட் பாடத்திட்டத்தின் முழுமையான கையேடுகள், முந்தைய நீட் தேர்வு வினாக்களுக்கான விளக்கங்கள் மற்றும் மாணவர்களுக்கான சந்தேகங்களை தீர்க்கும் வகையிலான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

Tags

Next Story