மதுரை மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் நீட் தேர்வு

மதுரை மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் நீட் தேர்வு

மதுரை மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் நீட் தேர்வு காலை முதலே ஆர்வமுடன் வருகை தரத் தொடங்கிய மாணாக்கர்கள் கடும் சோதனைக்கு பின்பாக அனுமதிக்கப்பட்டனர்.


மதுரை மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் நீட் தேர்வு காலை முதலே ஆர்வமுடன் வருகை தரத் தொடங்கிய மாணாக்கர்கள் கடும் சோதனைக்கு பின்பாக அனுமதிக்கப்பட்டனர்.

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தக்கூடிய நீட் தேர்வு இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 13 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது இதில் 9312 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் மதுரை , ராமநாதபுரம் , சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர்களும் ஆர்வமுடன் காலை முதலாகவே தேர்வு மையங்களுக்கு வருகை தர தொடங்கினர் காலை 11:00 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் கடும் சோதனைக்கு பின்பாகவே அனுமதிக்கப்பட்டனர். மாணாக்கர்கள் ஆபரணங்கள் அணியக்கூடாது பேனா உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்லக்கூடாது வாட்ச் பெல்ட் அதே போன்று ஹேர் பேண்ட் உள்ளிட்டவைகள் அணிந்து வரக்கூடாது என ஒவ்வொரு மாணவ மாணவிகளும் சோதனை செய்யப்பட்ட பின்பாக அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளுக்கு தலையில் அணியக்கூடிய ஹேர் பேண்ட் அணியக்கூடாது என கூறிய நிலையில் அதே போன்று தலையில் ஜடையும் அணியக்கூடாது என கூறப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாணவிகளும் அவசர அவசரமாக தங்களது ஹேர்பேண்ட்களையும் ஜடைகளையும் அகற்றிவிட்டு பதற்றத்தோடு தேர்வு மையங்களுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் தேர்வுமைய கண்காணிப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் முழுவதுமாக தேர்வுகளை கண்காணித்து வருகின்றனர் மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரைக்கும் நடைபெறும் இந்த நீட் தேர்வு எழுத மாணவ மாணவிகள் மதியம் 1:30 மணிக்குள் வரவேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 11 மணிக்கு ஆர்வமுடன் வருகை தர தொடங்கினர்.

இதேபோன்று கலாச்சாரம் சார்ந்த உடைகளான புர்கா உள்ளிட்ட உடைகள் அணிந்து வரக்கூடிய மாணவிகள் 12.30 மணிக்காக தேர்வு மையங்களுக்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 12:30 மணிக்குள்ளாக வருகை தந்த மாணவிகளுக்கு உரிய சோதனை நடத்தப்பட்ட பின்பாக தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை நீட் தேர்வு முறைகேடு தடுக்கும் மற்றொரு முயற்சியாக நுண்ணறிவு தொழில்நுட்பம் AI மூலமாக கண்டறிவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர் தேர்வு மையங்களுக்கு செல்லக்கூடிய மாணாக்கர்கள் ஆதார் கார்டு மற்றும் ஏதேனும் ஒரு ஆவணங்கள் தேர்வு நுழைவு சீட்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மட்டுமே எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story