நீட் தேர்வு குளறுபடிக்கு சிபிஐ விசாரணை தேவை - அசோகன்

நீட் தேர்வு குளறுபடிக்கு சிபிஐ விசாரணை தேவை - அசோகன்

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன்

நீட் குளறுபடிகள் குறித்து சி பி ஐ விசாரணை மேற்கொண்டு குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , நீட் குளறுபடிகள் இதுவரை நடைபெறாத முறையில் நடைபெற்றுள்ளதால் சி பி ஐ விசாரணை வேண்டும் என்றும் குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் சரியான முறையில் நீதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.1653 மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் நீட் தேர்வு வைப்பதால் தீர்வு கிடைக்காது , அது தீர்வே கிடையாது என்ற அசோகன் , மருத்துவர்களுக்கும் , நோயாளிகளுக்கும் இடையேயான உறவு தகர்ந்துவிட்டது என்றும் மருத்துவர்கள் சரியான முறையில் நடப்பதற்கான வழிமுறைகளை இந்திய மருத்துவ சங்கம் எடுத்துவருகிறது என்றார்.

Tags

Next Story