தர்மபுரி மாவட்டத்தில் துவங்கியது நீட் தேர்வு
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நீட் தேர்வு துவங்கியது. இந்தாண்டுக்கான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று எட்டு மையங்களில் துவங்கியது.
இதில் தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில், 1,224 பேர் தேர்வு எழுத உள்ளனர். தர்மபுரி எஸ்வி ரோட்டில் உள்ள டான் சிக்சாலயா பப்ளிக் பள்ளியில், 1,200 பேர், ஸ்ரீவிஜய் வித்யாஸ்ரம் சீனியர் செகன்டரி பள்ளியில், 1,152 பேர், நல்லானுார் ஜெயம் இன்ஜினியரிங் கல்லுாரியில், 504 பேர், பென்னாகரம் மெயின் ரோட்டில் உள்ள விஜய் மில்லினியம் பள்ளியில், 456 பேர், வாரியார் பள்ளியில், 384பேர்,செட்டிக்கரையில் உள்ள கேந்திரவித்யாலயா பள்ளியில், 360 பேர், பாலக்கோடு சாலையில் உள்ள கமலம் இன்டர்நேசனல் பள்ளியில், 478 பேர் என, தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம்,
ஐந்தாயிரத்து, 758 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வுக்கு முன்னதாக மாணவ மாணவிகள் கடும் சோதைனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.