திருத்தணி முருகன் கோவிலில் பந்தல் அமைப்பதில் நிர்வாகம் அலட்சியம்

திருத்தணி முருகன் கோவிலில் பந்தல் அமைப்பதில் நிர்வாகம் அலட்சியம்

திருத்தணி முருகன் கோவிலில் பந்தல் அமைக்காமல் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

திருத்தணி முருகன் கோவிலில் பந்தல் அமைக்காமல் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த, 15ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி விழா நடந்து வருகிறது. இதற்காக கடந்த, 9 நாட்களுக்கு முன் கோவில் பின்புறம் உற்சவர் இறங்கும் இடத்தில் பிரம்மோற்சவ விழா மற்றும் திருக்கல்யாணம் ஒட்டி பந்தல்கால் நடப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு பந்தல் அமைக்காமல் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

பொதுவாகவே, பந்தல்கால் நட்டவுடன் பந்தல் அமைப்பது வழக்கம். ஆனால் கோவில் நிர்வாகம் அலட்சியத்தால் வெறும் பந்தல்கால் கொம்புடன் பிரம்மோற்சவ விழா நடத்தி வருவது பக்தர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இன்று திருக்கல்யாணத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற உள்ள நிலையில், பந்தல் அமைக்காமல் கோவில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பக்தர்கள் சார்பில் கூறப்படுகிறது.

Tags

Next Story