தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த மக்களுடன் பேச்சுவார்த்தை

தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த மக்களுடன் பேச்சுவார்த்தை

தேர்தலை புறக்கணித்த மக்களுடன் பேச்சு வார்த்தை

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த மக்களுடன் அமைச்சரின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சி ஒன்றாம் வார்டிற்கு உட்பட்ட பெரும் ஏலா பகுதியில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்ன தாக பொதுமக்கள் அமைத்த ரோடு, தற்போது சுற்றுலா அணுகு சாலையாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால், வருடங்கள் கடந்தும் பணிகள் சீரமைப்பு நடக்கவில்லை. இதனால் முறையான பாதை வசதி இல்லாமலும், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும் அப்பகுதி அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தர விட்டும் பணிகள் நடக்காததால், மக்கள்தேர்தல் புறக்கணிப்பு அறிவித்தனர்.

இதை தொடர்ந்து அமைச்சர் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர்.வளர்ச்சி பணிகளுக்கான முயற்சிகள் தொடர்ந்து நடப்பதாகவும், தேர்தல்முடிந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாவும் கூறினர்.ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, பேரூராட்சி பிரதிநிதிகளோ உத்தரவாதம் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து கவுன்சிலர் கிருஷ்ணவேணி சம்பவ இடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். வரும் நாட்களில் செயல் அலுவலர் நேரில் வந்து பேசி சுமூக முடிவு ஏற்படுத்துவதாக கூறினர்.

Tags

Next Story