நெல்லை: கன மழையால் சாய்ந்து விழுந்த மரம்

நெல்லை: கன மழையால் சாய்ந்து விழுந்த மரம்
மரத்தை அகற்றும் பணி

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை டவுன் குறுக்குத்துறை சாலையில் அமைந்துள்ள பழமையான வாகை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த நெல்லை சந்திப்பு போலீசார் சாலையில் பேரிகாடுகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். மேலும் மரம் விழுந்ததன் காரணமாக மின்சார வயர்களும் அறுந்து விழுந்துள்ளது. பாதுகாப்பு நடந்துருதி மின்சார துறையினர் அப்பகுதியில் மின்சாரத்தை தடை செய்துள்ளனர்.சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்துவதற்கான பணிகளில் மாநகராட்சி நிர்வாகம், தீயணைப்பு துறையினருடன் இணைந்து போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story