கொலை வழக்கில் திணறும் நெல்லை போலீசார்
ஜெயக்குமார்
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் கடைகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று (மே 15) இரவு திசையன்விளை ஜவுளிக்கடை, இட்டமொழியில் உள்ள அரசு வங்கி, ஆனைகுடி நகைக்கடை உள்பட வழிநெடுகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் தலைமையிலான 3 தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.
Next Story