ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் - எஸ்பி உத்தரவு
நெல்லை எஸ்பி
சாதிய ரீதியாக பொய் வழக்குகள் பதிவு செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 2 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் மீது சாதி ரீதியாக பொய் வழக்கு பதிவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பவுல், அருள்ராஜ் ஆகியோரை பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று (மே 11) உத்தரவிட்டார்.
Next Story