நெல்லை : கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை
காவல் நிலையம்
நெல்லையில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள தென்கலம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம் மூஷா (42). கிராம உதவியாளரான இவர் குடும்ப பிரச்னை காரணமாக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story