மூங்கிலாத்தம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

மூங்கிலாத்தம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

மூங்கிலாத்தம்மன்

கரியாக்குடல் மூங்கிலாத்தம்மன் கோவிலில் நடந்த சித்திரை மாதத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

ராணிபேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட கரியாக்குடல் பகுதியில் அமைந்துள்ள மூங்கிலாத்தம்மன் கோவிலில் சித்திரை மாதத்திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு பால், நெய், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பகலில் பக்தர்கள் விரதமிருந்து பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் வைத்தனர். மாலையில் கரியாக்குடல் சரபேஸ்வரர் பீடாதிபதி ஞானப்பிரகாச சுவாமிகள் கலந்துகொண்டு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். இதில் சிறுணமல்லி, கீழ்வீதி, நாகவேடு, அசநெல்லிகுப்பம், வேட்டாங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story