பண மோசடி வழக்கில் நியோமேக்ஸ் துணை நிறுவன முகவர் கைது

பண மோசடி வழக்கில் நியோமேக்ஸ் துணை நிறுவன முகவர் கைது
நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில், நியோ மேக்ஸின் துணை நிறுவனமான குளோமேக்ஸ் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலம் 600 பேரிடம் ரூ.125 கோடி வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி பணத்தை பொதுமக்களிடம் இருந்து நிறுவனத்திறகு வசூலித்துகொடுத்த முகவரான விருதுநகரை சேர்ந்த தியாகராஜன் (36) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர் மீது 5 புகார்கள் வந்துள்ள நிலையில், போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது, ''நியோமேக்ஸ் மோசடி வழக்கு தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டு வருகிறது. பொதுமக்கள் இதுபோன்ற நிதிநிறுவனங்கள், மற்றும் முகவர்களிடம் கவனமுடன் இருக்க வேண்டும்'' என்றனர்.
