நேதாஜியால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது -ஜி.கே வாசன்

நேதாஜியால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது -ஜி.கே வாசன்
நேதாஜியால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என ஜி.கே வாசன் பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆகம விதிகளுக்கு உட்பட்டே அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டது எனவும், முதல்வரின் கருத்து தவறானது எனவும் அவர் தெரிவித்தார்.திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்தததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர் எனவும், அரசு அமைச்சர்களின் செயல்பாடுகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த அவர், நேதாஜியால் மட்டுமே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்ற ஆளுநரின் கருத்துக்கு இந்தியர்களின் ஒவ்வொருவரின் பங்கு உண்டு என தெரிவித்தார்.

பெண்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா தான் முன்னோடி எனவும், மகளிருக்கான உரிமை தொகை பாகுபாடு காட்டப்படுகிறது எனவும், அனைவருக்கும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.தன்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்டே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் எனவும், காழ்ப்புணர்ச்சி அரசியல் காரணமாக அரசு ஆளுநர் மீது பழி போடுவது சரியல்ல எனவும், தலித் மக்களின் நன்கொடை திருப்பி அனுப்பப்பட்டதான கருத்து உண்மையல்ல எனவும், நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படை தன்மை மட்டுமே இந்தியாவுக்கான ஒரே மாடல், இந்த மாடல் இருந்தால் வளமான தமிழகம், வலிமையான பாரதம் ஏற்படும்; பெருந்தலைவர் காமராஜர் பின்பற்றி வந்த இந்த மாடலை மோடி பின்பற்றி வருகிறார் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக மக்கள் சந்திப்பு, கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவலுக்கு ஜோசியத்திற்கு பதிலளிக்க முடியாது எனவும், மசூதி, தேவாலயங்கள் மீது காவி கொடி கட்ட மாட்டார்கள், கட்டவும் முடியாது எனவும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் எதையும் குலைக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி நடைப்பயணம் தடை என்ற கருத்துக்கள் அந்தந்த மாநிலங்களின் கோட்பாடுகளுக்கு ஏற்ப நடைபயணம் அமைய வேண்டும், கோட்பாடுகள் மீறும்போது போக்குவரத்து நெரிசல், மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்; அரசியல் கட்சிகள் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story