திண்டுக்கல்லில் வலைப்பந்து விளையாட்டு விதிகள் புத்தக வெளியீட்டு விழா

திண்டுக்கல்லில் வலைப்பந்து விளையாட்டு விதிகள் புத்தக வெளியீட்டு விழா

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

திண்டுக்கல்லில் வலைப்பந்து விளையாட்டு விதிகள் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.

திண்டுக்கல்லில் வலைப்பந்து விளையாட்டு விதிகள் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. வலைப்பந்து சங்கமாவட்டத் தலைவர் வி .எம். செல்வக்கனி புத்தகத்தை வெளியிட்டார். இதை மனிதநேய செம்மல் பட்டேல் ஹாக்கி அகாடமி மாவட்ட செயலாளர் ஞானகுரு பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து வலைப்பந்து கழக மாவட்ட தலைவர் வி .எம் .செல்வக்கனி கூறியதாவது: வலைப்பந்தாட்டம் கையினால் விளையாடக்கூடிய பாதுகாப்பான விளையாட்டு ஆகும். அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு எளிய விளையாட்டாகும்.

இந்த விளையாட்டு கூடைப்பந்தாட்டம், விளையாட்டு போல் சாயல் கொண்டு இருக்கும். நெட்பால் ஆரம்பத்தில் உலகில் பல நாடுகளில் பெண்கள் அதிக விளையாடக்கூடிய விளையாட்டாக இருந்தது. இந்த விளையாட்டுக்கு நடைமுறை விதிகள் எளிமையாகவும் ,பாதுகாப்பாகவும்,

விளையாண்டவரின் சுறுசுறுப்பு உடல் வலிமையை வெளிப்படுத்துகின்ற திறனும் உள்ளது.இந்த புத்தகம் அவர்கள் வாழ்விற்கு வழிகாட்டியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story