வாகன புகை பரிசோதனை மையங்களுக்கு புதிய செயலி - ஆட்சியர்
ஆட்சியர் சாந்தி
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளதாவது ,மாநிலம் முழுவதிலும் 534 வாகனப் புகைப் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. சென்னை உ ள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால் காற்று மாசுபாடு ஏற்பட்டு அதனால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் பொதுமக்களிடையே ஏற்படுகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதிலும் 534 வாகன புகைப் பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இந்த வாகன புகை பரிசோதனை மையங்களில் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களை புகுத்தவும் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் தற்போது PUCC 2.0 Version அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய PUCC 2.0 கீழ்கண்ட முக்கியமான அம்சங்கள் உள்ளன.அந்தந்த வாகள புகைப் பரிசோதனை மையத்துக்கென தனிப்பட்ட அலைபேசி உரிமதாரரால் பயன்படுத்தப்படும். அந்த அலைபேசியில் PUCC 2.0 Version App-ஐ நிறுவி இயவேண்டும். விந்த புதிய Version GPS வசதியுடன் கூடியதாகும். இந்த செயலி நிறுவப்பட்ட அலைபேசி தொடர்புடை டயவாகணப் புகைப் பரிசோதனை மையத்திலிருந்து 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும்.மேலும் புகை பரிசோதனை மையங்கள் தாங்களாக பயன்படுத்தும் மென்பொருளை இந்த PUCC 20 Verion செயலியை இனி பயன்படுத்த முடியாது.
மாறாக வாகள் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்களது கருவியை பொருத்தினால் மட்டுமே இந்த செயலி செயல்படும். இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய நடைமுறை 06.05.2024 (திங்கட்கிழமை) முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.இந்த புதிய PUCC 2.0 Version குறித்த செயல்முறை விளக்கம் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மைய சோதனையாளர் மற்றும் உரிமைதாரர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து இந்த புதிய PUCC 20 Versionஐ வரும் திங்கள் கிழமை (06.05.2024) முதல் அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மையங்களும் நிறுவி அதன் மூலம் மட்டுமே வாகனப் புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்ய தவறும் வாகன புகைப் பரிசோதனை மையங்கள் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடி சில் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்தார்.