ராமநாதபுரம்: புதிய ஆர்வ குடிநீர் திறப்பு

ராமநாதபுரம்: புதிய ஆர்வ குடிநீர் திறப்பு
ஓஎன்ஜிசி
வழுதூர் கிராமத்தில் ஓஎன்ஜிசி மூலம் 1000 லிட்டர் புதிய ஆர்வோ குடிநீர் திறப்பு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சி வழுதூர் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் சுமார் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய ஆர்வோ குடிநீர் பிளான்ட் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை ஓஎன்ஜிசி நிர்வாகம் மேலாளர் இளங்கோவன் துவக்கி வைத்தார் வாலாந்தரவை ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி பூரணவேல் துணைத்தலைவர் ஜீவா சங்கர், ஆகியோர்கள் கலந்து கொண்டனர், வழுதூர் கிராம பொதுமக்கள் பிடி ராஜா வி சி கனகராஜன் முத்துசாமி, துரை, ஏ பி பி பாஸ்கரன், பாலு ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற உறுப்பினர் மாரி கணேஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஆர்ஓ குடிநீர் வழங்குவதற்கு முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். இப்பகுதியில் அமைவதற்கு ஏற்பாடு செய்து தந்த ஓஎன்ஜிசி மேலாளர் இளங்கோவன், அவர்களுக்கும் வாலாந்தரவை ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி பூரணவேல் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவா சங்கர் ஆகியோர்களுக்கும் கிராம பொதுமக்கள் சார்பில் பிடி ராஜா மற்றும் விசி கனகராஜன் ஆகியோர்கள் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story