கன்னியாகுமரியில் ரூ.7 கோடியில் புதிய படகு தளம்  - பணிகள் நிறைவு

கன்னியாகுமரியில் ரூ.7 கோடியில் புதிய படகு தளம்  - பணிகள்  நிறைவு
கன்னியாகுமரி (பைல் படம் )
கன்னியாகுமரியில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய படகு தளம் அமைக்கும் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் போன்றவற்றை பார்வையிட தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. இது தவிர வட்டக்கோட்டை செல்வதற்கு இரண்டு சொகுசு படகுகள் உள்ளன. இந்த படகுகள் அனைத்தும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகு துறையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஐந்து படகுகள் நிற்கும் வகையில் இந்த படகு துறை போதுமானதாக இல்லை. கடல் சீற்றம் ஏற்படும் போது, படகுகள் ஒரே இடத்தில் நிறுத்தும் போது ஒன்றோடு ஒன்று மோதும் நிலை உள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் வகையில் ரூ. 7 கோடியில் புதிதாக படகு துறை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது உள்ள படகு துறைக்கு எதிர்ப்புறம் உள்ள கடல் பகுதியில் புதிய படகு தளம் அமைக்க முடிவு செய்து, பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. சுமார் ஒன்பது மாதத்திற்கு மேல் நடந்து வந்த இந்த பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த படகு தளம் 800 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story