குடிப்பழக்கத்தால் மனைவியுடன் தகராறு - புது மாப்பிள்ளை தற்கொலை
தற்கொலை செய்து கொண்டவர்
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் கே.வி. பழனிச்சாமி நகரைச் சேர்ந்தவர் மோகன் குமார் (34) லாரி டிரைவர். இவருடைய தந்தை மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டார். மோகன் குமாருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மோகன் குமார் தனது மனைவி மற்றும் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். மோகன் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது இதனால் கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த மோகன் குமாரை தாயாரும் மனைவியும் திட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இதனால் மனமுடைந்த மோகன்குமார் தனது வீட்டில் விட்டதில் சேலையால் தூக்கிட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் வெள்ளகோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். திருமணமான ஒரே மாதத்தில் லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.