ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்குப் புதிய கட்டடிடம்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்குப் புதிய கட்டடிடம்

ராஜிவ்காந்தி மருத்துவமனை

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்குப் புதிய கட்டடிடம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

நரம்பியல் துறைக்கென்று புதிதாக உருவாக்கப்படும் இந்தக் கட்டடம் அளவு இலட்சத்து 12 ஆயிரத்து சதுர அடியில் (10,428 ச.மீ) நான்கு தளங்களுடன் 220 படுக்கை வசதிகளோடு கட்டுமாணப் பணிகள் விரைவாக முடிக்கப்படும் இந்தக் கட்டடத்தில்,

தரைத்தளத்தில் நரம்பியல் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு, இயன் மருத்துவ பிரிவு போன்ற வசதிகள் அமைய உள்ளது முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பொது வார்டுகள், மூன்றாம் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது நான்காம் தளத்தில் நவீன வசதிகள் கொண்ட 6 அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை, மீட்பு அறை போன்ற வசதிகள் இடம்பெறுகிறது.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் இக்கட்டடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், மின்தூக்கிகள் இரண்டு படிக்கட்டுகள், சாய்வுதளம் அமைய உள்ளது மருத்துவ திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு சிறந்த நரம்பியல் துறை மருத்துவ சேவைகளை வழங்கும்..

Tags

Next Story