ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் - கிராம மக்கள் மனு

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் - கிராம மக்கள் மனு

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

எறையூர் அருகே சின்னாறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பகுதி நேர ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி தர கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள 36.எறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாறு கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஜனவரி 29ம் தேதி இன்று காலை,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு எறையூர் கிராமத்திற்கு நீண்ட தொலைவு சென்று அங்குள்ள நியாய விலை கடையில் பொருட்கள் வாங்கி வந்ததோம், தங்களது சிரமத்தை கருதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பகுதி நேர நியாய விலை கடை சின்னாறு பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் திறக்கப்பட்டது. அந்த கடைக்கான வாடகையும் குடும்ப அட்டைதாரர்களே வழங்கி வந்ததோம். தற்பொழுது கட்டடத்தின் உரிமையாளர் நியாய விலை கடையை காலி செய்து தருமாறு கூறி வருவதால் தங்கள் பகுதியிலேயே பகுதி நேர நியாய விலை கடைக்கு புதிதாக அரசு கட்டிடம் கட்டி தர வேண்டும் அதேபோல அங்கன்வாடிக்கும் தங்களுக்கு தனியாக கட்டிடம் கட்டி, சின்னாறு பகுதி குழந்தைகளின் நலன் கருதி தனியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story