ஜவ்வாது மலையில் புதிய கட்டிடங்கள்- எம்.எல்.ஏ திறப்பு

ஜவ்வாது மலையில் புதிய கட்டிடங்கள்- எம்.எல்.ஏ திறப்பு

கட்டிடங்களை திறந்து வைத்த எம்எல்ஏ சரவணன் 

திருவண்ணாமலை மாவட்டம்,கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி ஜவ்வாது மலையில், சுமார் ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர். பெ. சு. தி. சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திறந்துவைத்தார். ஜவ்வாது மலை ஒன்றியம் வீரப்பனூர் ஊராட்சியில் விளாங்குப்பம் வீரப்பனூர். கள்ளிப்பாறை. அரசவல்லி . வீரப்பனூர் பர்கூர் ஆகிய ஊராட்சிகளில் புதிய கட்டிடங்கள் பள்ளி கட்டிடங்கள் நியாய விலை கடை கட்டிடங்கள் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள் மற்றும் மக்களிடம் மனுக்கள் வாங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், வேணுகோபால்,ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி, துணைத்தலைவர் மகேஷ்வரி செல்வம், ஒன்றிய செயலாளர் கேசவன், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story