புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள்: அமைச்சர் ஆய்வு

திருத்தணி நகராட்சி அரக்கோணம் சாலையில் 4.92 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 12 கோடியே 74 லட்சம் மதிப்பில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் .காந்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் .த. பிரபு சங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பொதுமக்கள் மற்றும் திருத்தணி முருகன் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பேருந்து நிறுத்தம், கடைகள், குடிநீர் வசதி, ஆண் மற்றும் பெண்கள் கழிப்பிடம் உணவகம் ,சிற்றுண்டி காவல் மையம், ஏடிஎம் மையம் இருசக்கர,4 சக்கர வாகன நிறுத்தத்துடன் கூடிய கட்டுமான பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது திருத்தணி நகர மன்ற தலைவர், வருவாய் கோட்டாட்சியர் நகராட்சி ஆணையர் நகராட்சி பொறியாளர், வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story