நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் புதிய பேருந்து நிழற்குடை

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் புதிய பேருந்து நிழற்குடை
புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் 
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் ரூ. 13.55 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாப் அமைக்க கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது அங்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் ரூ. 13.55 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாப் அமைக்க, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதையொட்டி மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., புதிய பஸ் ஸ்டாப் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story