புதிய பேருந்து நிலையம் மேயர் ஆய்வு!

X
ஆய்வு செய்த மேயர்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி செய்வது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மேயர் கூறுகையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிறுத்துவதற்கான இடம் ஏற்படுத்தி கொடுத்த பிறகும் மேலூர் ரயில் நிலையம் அருகில் இருப்பதாலும் பொதுமக்களின் பயன்பாடு அந்தப் பகுதியில் கூடியுள்ளது. மே
லும் இரு சக்கர வாகன நிறுத்தவதற்கான இடத்தில் கார், வேன் போன்ற வாகனங்களும் நிறுத்துவதற்கான இடவசதியும் செய்து தருமாறும் பொதுமக்களிடம் இருந்து வந்த கோரிக்கையினையடுத்து அந்தப் பகுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார். ஆய்வின்போது திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட செயலாளர் ராஜாமணி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். .
Tags
Next Story
