ஓட்டுநா் உரிமத் தேர்வுக்காக புதிய கார்

ஓட்டுநா் உரிமத் தேர்வுக்காக புதிய கார்

வாங்கப்பட்ட புதிய கார்

ஓட்டுநா் உரிமத் தேர்வுக்காக புதிய கார் வாங்கப்பட்டது.

திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காா் புதன்கிழமை திண்டுக்கல் அலுவலகத்துக்கு வந்தது. இந்தக் காரில், உரிமத் தேர்வில் பங்கேற்போருக்கு இணையாக, பரிசோதிக்கும் அலுவலா்களுக்கும் ஸ்டீரிங், பிரேக், கிளச் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் வகையில் உதிரிப் பாகங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் முடிவடைந்ததும், உரிமத் தேர்வுக்கு வருவோா் இயக்கிக் காண்பிக்க இந்தக் காா் இலவசமாக வழங்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தெரிவித்தனா்.

Tags

Next Story