சங்கரன்கோவில் அருகே புதிய சிமெண்ட் சாலை - எம்எல்ஏ துவக்கி வைப்பு
புதிய சாலை திறப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் வன்னிக்கோனந்தலில் அம்மன் கோவில் தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலையை தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி திமுக தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல.சரவணன், மேலே நீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றி விஜயன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags
Next Story