மழை நீர் வெளியேற புதிய வழித்தடம் : அதிகாாிகள் ஆய்வு

மழை நீர் வெளியேற புதிய வழித்தடம் : அதிகாாிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு 

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மழை நீரை வெளியேற்ற புதிய வழித்தடத்தை அதிகாாிகள் பாா்வையிட்டனா். 
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் ஜேஜே.நகர் மாிய தனிஸ்லாஸ்நகா் அருகிலுள்ள காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளி அருகில் வெள்ள நீரானது ரோட்டை கடந்து செல்லும் விதமாக அகலப்படுத்திடேவிஸ்புரம் ரேசன்கடையை தாண்டி கோமஸ்புரம் கண்மாயில் கலக்கும் வகையிலான ஓர் புது வழித்தடத்தை அதிகாாிகள் வெற்றிகரமாக உருவாக்கி உள்ளாா்கள். பெருவாரியான வெள்ள நீர் அவ்வழியே செல்வதினால் மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் மேற்கு பகுதிகளில் இன்னும் நான்கைந்து நாட்களில் சூழ்ந்த வெள்ள நீர் வடிந்து விடும். இப்பணிகளை பிடிஓக்கள் ஹெலன், வசந்தா, இன்ஜினியர் ரவி தளவாய் ஆகியோா் இன்று காலையில் பாா்வையிட்டாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், ஒன்றிய கவுண்சிலா் இரா.அந்தோணி தனுஸ்பாலன் மற்றும் செல்வம் உட்பட பலா் உடனிருந்தனா்.

Tags

Next Story