செம்மங்குடி மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
புதிய திருத்தேர் வெள்ளோட்டம்
திருவையாறு அருகே செம்மங்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
திருவையாறு அருகே செம்மங்குடி ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயிலுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் திருத்தேர் உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இப்புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. அனுஞ்கை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ஸ்ரீ மஹா மாரியம்மன் தேர் பிரதிஷ்டை ஹோமங்கள், பூஜைகள் நிறைவு பெற்று தீபாராதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய திருத்தேர் வெள்ளோட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகள் வலம் வந்து நிலையை அடைந்தது.
Next Story