அரசுபள்ளியில் ரூ.35 லட்சத்தில் புதிய வகுப்பறை - பூமி பூஜை
பூமி பூஜை
மொடக்குறிச்சி அருகேயுள்ள கஸ்பாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏராளமான கிராமப்புற மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் போதிய வகுப்பறைகள் இன்றி சிரமடைந்து வருவதாக பெற்றோர்கள் மொடக்குறிச்சி எம்.எல்.ஏவிடம் புதியவகுப்பறை கட்டிடம் கட்ட நிதி வேண்டி மனு அளித்தனர். இதனையடுத்து புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கலந்துகொண்டு பள்ளியில் வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story