சிவகாசியில் புதிய மாநகராட்சி கட்டிடம்
நகராட்சி அலுவலகம் பணிகள்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் ரூ.10கோடியில் புதிய மாநகராட்சி அலுவலகமும் ரூ.5கோடியில் வணிக வளாகமும் கட்டும் பணி விறுவிறுப்பாக நவீன வசதிகளுடன் தயாராகி வருகின்றது.
சிவகாசி,திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021ல் சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகாசி மாநகராட்சி அலுவலகம் தற்போது சிவகாசி- திருவில்லிபுத்தூர் சாலையில் 2 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இதில் போதிய வசதிகள் இல்லாத நிலையில் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதனை தொடர்ந்து சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே புள்ளைக்குழியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
புதிய மாநகராட்சி அலுவலகம் கட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. மேலும் புதிய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு நிதியின் மூலம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகமும் கட்ட அரசு அனுமதி வழங்கியது. புதிய கட்டிட பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தார்.
தற்போது புதிய மாநகராட்சி அலுவலக கட்டிட பணிகளும் புதிய வணிக வளாக கட்டிடம் கட்டும் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகின்றது. வணிக வளாகத்தில் 103 வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மாநகராட்சி புதிய கட்டிட பணிகளை மேயர் சங்கீதாஇன்பம்,
துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவ்வப்போது நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். கடடிட பணிகள் 18 மாதங்கள்வரை ஆகும் என்ற நிலையில் தற்போதுவரை சுமார் 70 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடம் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய அடித்தளம் 1501.97 சதுர அடியிலும்,
தரைத்தளம் 1647.10 சதுர அடியிலும் முதல் தளம் 1403.80 சதுர அடியிலும், மேல்தளம் 179.47 சதுர அடி என மொத்தம் 4732.34 சதுரடி பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றகலைஞர், காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூறும்போது,சிவகாசி மாநகராட்சியின் தேவை கருதி சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே புள்ளைக்குழியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.10 கோடி நிதி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன்அருகே ரூ.5கோடியில் மாநகராட்சி வணிக வளாகமும் கட்டப்பட்டு வருகின்றன.
வரலாற்று சிறப்பு மிகுந்த சிவகாசி மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு கலைஞர் மாளிகை என பெயர் சூட்ட வேண்டும். புதிய வணிக வளாக கட்டிடத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். புதிய கட்டிடங்களுக்கு கலைஞர், காமராஜர் பெயர் சூட்டி மாபெறும் இருபெரும் தலைவர்களுக்கும் சிவகாசி மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்றார்.