பாபநாசத்தில் புதிய கோர்ட்

பாபநாசம் புதிய கோர்ட் கட்டுவதற்கான இடத்தினை சென்னை ஐகோர்ட் நீதிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாபநாசம் புதிய கோர்ட் கட்டுவதற்கான இடத்தினை சென்னை ஐகோர்ட் நீதிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் கட்டிடம் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கட்டுவதற்கான இடத்தினை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது உடன் தஞ்சை முதன்மை மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின்,தஞ்சை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா, பாபநாசம் நீதிபதி அப்துல் கனி,பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன், பாபநாசம் போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்,அரசு குற்றவியல் வழக்கறிஞர் சுதா, அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பாபநாசம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாஸ்கரன்,துணை தலைவர் கம்பன், செயலாளர் இளையராஜா. பொருளாளர் பாலச்சந்திரன், தஞ்சை கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் செல்வி,உதவி பொறியாளர் சிவரஞ்சனி,பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன்,வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன் கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் நில அளவையர்கள் மகாலட்சுமி அழகேசன் மற்றும் அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற பணியாளர்களும் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story