சிவகாசி அரசு மருத்துவமனையில் புதிய சி.டி.ஸ்கேன் மையம் திறப்பு

சிவகாசி அரசு மருத்துவமனையில் புதிய சி.டி.ஸ்கேன் மையம் திறப்பு
சிவகாசி அரசு மருத்துவமனையில் புதிய சி.டி.ஸ்கேன் மையம் திறப்பு. நிதி அமைச்சர் பங்கேற்பு..
சிவகாசி அரசு மருத்துவமனையில் புதிய சி.டி.ஸ்கேன் மையம் திறப்பு விழாவில் நிதி அமைச்சர் பங்கேற்றார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தேசிய சுகாதார திட்டத்ன் கீழ் ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் சி.டி ஸ்கேன் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., தலைமையில்,

சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன்,சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.சிவகாசி மருத்துவமனையில், பொதுமருத்துவம்,பொது அறுவசிகிச்சை,எலும்புமுறிவு அறுவை சிகிச்சை,அவசர சிகிச்சை பிரிவு,

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, இரத்த சுத்திகரிப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவசேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்தவர் அய்யனார், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலட்சுமி,சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா உட்பட அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story