மோகனூர் பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்டம் - எம்.பி தகவல்

மோகனூர் பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்டம் - எம்.பி தகவல்

மோகனூர் பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்டம் - இராஜேஸ்குமார் எம்.பி தகவல்

மோகனூர் பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்டம் - இராஜேஸ்குமார் எம்.பி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 10 நாட்கள் 13 அரசுத்துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 39 முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பல்வேறு சேவைகள் பெறும் வகையில் பொதுமக்களால் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 29 ஆம் தேதி மோகனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு முத்துராஜா தெரு மாசடச்சிஅம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு மேற்கொண்ட பின் இராஜேஸ்குமார் எம்.பி பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் குடிநீர் தேவை அடிப்படையாக கருதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி மோகனூர் பேரூராட்சிக்கு புதிதாக மல்லம்பாளையம் என்ற இடத்தில் மூன்று எண்ணிக்கையிலான நீர் உறிஞ்சி கிணறுகள் மற்றும் மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் பகிர்மான குழாய்கள் புதிதாக அமைத்து காவேரி கரையில் அமைந்துள்ள மோகனூர் பேரூராட்சி பகுதிகளுக்கு சீராக குடிநீர் விநியோகம் வழங்கும் வகையில் ரூ. 22.77 கோடி மதிப்பில் பணிகள் விரைந்து தொடங்கப்பட்டு நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story