மூலனூரில் புதிய ஆட்டுச் சந்தை தொடக்கம்

மூலனூரில் முதல்முறையாக ஆட்டுச்சந்தை துவங்கப்பட்டதை அடுத்து ஒரு மாதத்திற்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு.

தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சியில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஆட்டுச் சந்தை துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்தச் சந்தைக்கு மூலனூர் பேரூராட்சி செயலாளர் மக்கள் தண்டபாணி முன்னிலையில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் தலைவருமான இல.பத்மநாபன் தலைமையில் ஆட்டுச் சந்தை துவக்க விழா நடைபெற்றது.

மூலனூரில் நடைபெறும் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை காலை 5-மணி முதல் நடைபெறும் எனவும் மேலும் மூலனூர் பேரூராட்சி சந்தை பகுதியில் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகள் சந்தை கடந்த 10-வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. மூலனூர் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஆட்டுச் சந்தை திறப்பு விழா நடைபெற்றது.

மூலனூர் வாரச்சந்தைக்கு மூலனூர் அண்ணா நகர், பெரமியம், கிலாங்குண்டல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மூலனூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆட்டுச்சந்தை துவங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நேன்று துவக்க விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. நேற்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story