சவேரியார் தேவாலயத்தில் புது நன்மை உறுதி பூசுதல் சிறப்பு வழிபாடு

கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் சிறுவர் சிறுமிகளுக்கு புது நன்மை உறுதி பூசுதலை மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பையஸ் வழங்கினார்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ளது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் 7 அருட்சாதனங்களில் மிக முக்கியமான அருட்சாதனங்களாக கருதப்படும் புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது 12 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு இந்த அருட்சாதனம் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கோவிலூர் பங்கிற்குட்பட்ட சுமார் 36 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு இன்று மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பையஸ் தலைமையில் கோவிலூர் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்கு தந்தை லிபின் ஆரோக்கியம் உட்பட பங்குத்தந்தைகளின் கூட்டுத் திறப்பு வழியில் சிறுவர் சிறுமிகளுக்கு புது நன்மை உறுதி பூசுதல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story