புதிய நுாலகம் திறப்பு விழா..
சிவகாசி மாநகராட்சி பள்ளியில் சுமார் 2.5 கோடி மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் திறப்பு விழாவில் மேயர் பங்கேற்பு..
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் பள்ளியின் வளாகத்தில் அனைத்து பள்ளியின் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-2023 அறிவுசார் மையம் (நூலகம்) சுமார் 2 .51 கோடி மதிப்பீட்டில் நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார். சிறப்பு அம்சங்கள் திறன் மேம்பாட்டு ,சிறுவர் வாசிப்பு பகுதி ,கணினி பயன்பாட்டு,ஸ்மார்ட் வகுப்பு அறை என சுமார் 729 சதுர மீட்டர் அளவில் உள்ள நூலகத்தில் பொறியியல்,மருத்துவம் போட்டித் தேர்விற்கான, பள்ளி கல்வி, ஆங்கில அகராதிகள் நூலகத்தில் இடம் பெற்று இருக்கின்றன. நூலக திறப்பு விழாவில் மாநகராட்சி மேயர் சங்கீதா,துணை மேயர் விக்னேஷ்பிரியா,ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த மாநகரச் செயலாளர், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story