புதிய மாரியம்மன் சிலை திருவீதி உலா
வீதி உலா
தர்மபுரி நகர் குப்பா கவுண்டர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ பூவாடை காவேரி அம்மாள் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் சாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று 8 மணி அளவில் கணபதி ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹாமம்,ஸ்ரீ நவகிரக ஓமம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாக குழுவின் சார்பில் கொடியேற்றம் கங்காணம் கொட்டுதல் இன்று மாரியம்மனுக்கு கண் திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று மாரியம்மன் வாகனத்தில் அலங்கரித்து குப்பா கவுண்டர் தெரு கோவிலிலிருந்து புறப்பட்டு ஆத்து மேடு வழியாகச் சென்று தர்மபுரி கடைவீதி பெரியார் சிலை அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக வாத்தியமேளம் கரகாட்டம் பம்பை ஆட்டம் நடைபெற்றது.
ஊர்வலத்தில் வழி முழுவதும் பக்தர்கள் மாரியம்மனுக்கு தேங்காய் பாலம் உடைத்து வழிபட்டு தரிசனம் பெற்றனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது விழாக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.