புதுப்பெண் தற்கொலை: திருமணமாகி 21 நாட்களில் பரிதாபம்

புதுப்பெண் தற்கொலை:  திருமணமாகி 21 நாட்களில் பரிதாபம்

தற்கொலை 

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் திருமணமாகி 21 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 34). இவர் சென்னையில் அரசு ஊழியராக உள்ளார். இவருக்கும், பூலாவரியை சேர்ந்த என்ஜினீயர் சொர்ணலதா (32) என்பவருக்கும் கடந்த 21 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பூலாவாரியில் நடந்த கோவில் விழாவுக்கு புதுமண தம்பதி வந்து இருந்தனர்.

கணவன்- மனைவி இருவரும் நேற்று மதியம் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. திடீரென சொர்ணலதா வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாகவும், அங்கு துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதைக்கண்ட ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்தார். மனைவி உடலை பார்த்து கண்ணீர் வடித்தார். தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சொர்ணலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சொர்ணலதா தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருந்தாலும் திருமணம் ஆகி 21 நாட்கள் ஆன நிலையில் சொர்ணலதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுப்பெண் தற்கொலை தொடர்பாக உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story