ரூ.3 கோடியில் புதிய மினி விளையாட்டு மைதானம் - அமைச்சர் ஆய்வு

ரூ.3 கோடியில் புதிய மினி விளையாட்டு மைதானம் - அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ஆய்வு 

ரூ.3 கோடியில் புதிய மினி விளையாட்டு மைதானம் - அமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட கல்லடிமாமூடு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மினி விளையாட்டு மைதானம் அமைந்திடும் இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லடிமாமூடு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4.83 ஏக்கர் நிலத்தில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 இலட்சமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரசு நிதியின் கீழ் ரூ.2.50 கோடி என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கடந்த 19.10.2023 அன்று துவக்கி வைத்தார்கள். இவ்வாறு தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ராஜேஷ், குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story