அரசு பள்ளிக்கு புதிய நவீன கழிப்பறை கட்டடம்
நத்தம் சிட்டி அரிமா சங்கம் சார்பில் சமுத்திராபட்டி அரசுமேனிலைப்பள்ளிக்கு புதிய நவீன கழிப்பறை கட்டடம் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் சமுத்திராப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் மாணவிகளுக்கான நவீன புதிய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு அதை புள்ளியின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. இதற்கு மதுரை மாவட்ட லயன்ஸ் கிளப் ஆளுநர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை பள்ளிக்கு வழங்கினார்.
ஆடிட்டர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் புஷ்பராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் நத்தம் நகர் தலைவர் மகேஷ்வரன், செயலர் மூர்த்தி, பொருளாளர் கென்னடி உள்பட நத்தம் நகர, வட்டார உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியை ஆசிரியைகள், மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.