பென்னாகரம் அருகே புதிய பல்நோக்கு மையம் திறப்பு
பல்நோக்கு மையம் திறப்பு
தர்மபுரி மாவட்டம்,பவளந்தூர் கிராமத்தில் புதிதாக பல் நோக்கு மைய கட்டிடத்தை பென்னாகரம் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டுவன அள்ளி ஊராட்சி, பவளந்தூர் கிராமத்தில் புதிதாக பல் நோக்கு மையம் வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததின் பேரில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஜி கே மணி இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிராம பொது மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story