ரூ.65 கோடி மதிப்பில் புதிய நரம்பியல் பிரிவு - அமைச்சர் அடிக்கல்

ரூ.65 கோடி மதிப்பில் புதிய நரம்பியல் பிரிவு - அமைச்சர் அடிக்கல்

அடிக்கல் நாட்டு விழா 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ரூ. 65 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய நரம்பியல் பிரிவு கட்டிடத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 65 கோடி மதிப்பில் புதிய நரம்பியல் பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து எழும்பூரில் ரூ.12.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பயிற்சி பள்ளி மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய 40 விடுதி அறைகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story