ரூ.1.37 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள் - அமைச்சர் அடிக்கல்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.37 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் . இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் . பிரபாகரன் , மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசிய போது, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பெரம்பலூர் நகரம், துறையூர் சாலையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சாலையில் நடுவே மின்விளக்குகள் பொருத்தும் பணி, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிய இ சேவை மையம் கட்டடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேலும் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் துறைமங்கலம் 7வது வார்டு ராஜா நகர் 2வது குறுக்குத் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடை, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாலிகண்டபுரம் ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலை, தேவையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடம், என ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் 6 பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் முறையாக, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராமலிங்கம் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், கருணாநிதி, மகாதேவி ஜெயபால், , நகர்மன்ற துணைத்தலைவர் ஹரி பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story